Posts

Showing posts from April, 2019
பாலமலை ஸ்ரீ சித்தேஸ்வரன் கோவில் வணக்கம் நமது அடுத்த மலை பயணம் மேட்டுரை அடுத்த பாலமலை தான் ... பாலமலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம் ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக மற்றொன்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் 30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர் நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர் என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும், செல்லலாம் ...நெரிஞ்சிப்பேட்டை வழியாக செல்லும் போது கூடுதலாக குட்டி கேரளா என்று அழைக்கப்படும் அதுதாங்க நம்ம பாக்யராஜ் ன் பவுனு பவுனுதான் படம் எடுத்தாங்களே அந்த பகுதி தான் ..பார்த்துவிட்டு ..கொஞ்சம் சூடாக பிரெஷ் ஆத்து மீன் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் போட்டிங் போய்விட்டு ...பின்னர் பாலமலைக்கு தெம்பாக நடக்கலாம் ... நாம் இரண்டு வழிகளிலும் சென்று விடு தன இந்த பதிவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் ... முதலில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்வழியாக நெரிஞ்சிப்பேட்டை லிருந்து செல்லும் வழியை பற்றி பார்போம் .........மன்னிக்கவும் செல்லுவோம் .. இம் மலையில் சிதேஸ்வரர் மற்றும் கவ்வியபெருமாள் சன்னதிகள் உள்ளன...
Image
மேட்டூர் அணை மற்றும் பூங்கா மேட்டூர் அணை – வரலாறு காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி  1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும். மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவச...
Image
சேலம் மாவட்டம் - வரலாறு சேலம் மாவட்டத்தில் மனித நாகரீகத்தின் தோற்றம் கற்காலத்திற்கு மிகவும் முந்தய காலத்திலேயே துவங்கியிருக்கிறது. புதிய மற்றும் பழைய கற்காலத்திற்குரிய கற்கலால் ஆன கருவிகள் மற்றும் விலங்கு சானங்களின் சாம்பல் குவியல்கள் இந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுக்கு முந்தய கலாச்சாரம் இருந்ததாக அறியப்படுகிறது. கால அடிப்படையிலான சேலம் மாவட்ட வரலாறு பின்வருமாறு. பொது சகாப்தத்திற்கு முன்பு BCE (before common era) கி.மு3-ஆம் நூற்றாண்டு. தமிழ் சித்தர் – போகர் அவர்களின் காலம் புத்த, ஜைன மதங்கள் தொடக்கம் பொது சகாப்தம்Common Era(CE) கி.பி முதலாம் நூற்றாண்டு கி.பி(37-68) ரோம சக்கரவர்த்தி TibericsClaudices Neroஅவர்கள் காலத்திய வெள்ளி காசுகள் சேலம் மாவட்டம் கோனேரிபட்டியில் 1987 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தில், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமுதாயம் இருந்ததை அறிய முடிகிறது கி.பி 2ஆம் நூற்றாண்டு பாண்டிய வம்சத்தின் ஆட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் கனைக்கால் இரும்பொறை கொள்ளி மலை பகுதியை...